அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அவசர மத்திய குழு கூட்டம் இன்று (03) காலை கூடியது.
அரசாங்க மருத்துவ அதிகாரிகளின் மேலதிக பணிக்கொடை மற்றும் விடுமுறை கொடுப்பனவு வெட்டுக்கள் தொடர்பில் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில் கிடைக்காவிட்டால் மார்ச் 5 ஆம் திகதி முதல் நாடளாவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அரசாங்க அதிகாரிகள் சங்கம் இன்று (03) தீர்மானித்துள்ளது.
மார்ச் 6 ஆம் திகதிக்குள் குறித்த திருத்தம் செய்யப்படா விட்டால், மார்ச் 7 ஆம் திகதி முதல் கடுமையான முடிவுகளை எடுக்க நேரிடும் என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

