கிரிபத்கொடை- நாஹேன பிரதேசத்தில் உள்ளாடைக்குள் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த சந்தேக நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

34 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் உள்ளாடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் சந்தேக நபரிடமிருந்து ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் 8 கையடக்கத் தொலைபேசிகள், மோட்டார் சைக்கிள் மற்றும் மூன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகை ஆகியவையும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.