யானை தந்தங்கள் இரண்டினை வைத்திருந்த நபர் ஒருவரை உடவளவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (3) பகல் உடவளவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹ ஆர பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது இந்த சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
அத்துடன் அந்த நபரிடமிருந்து யானை தந்தங்கள் இரண்டையும் உடவளவ பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் 35 வயதுடைய உடவளவ பகுதியை வசிப்பிடமாகக் கொண்டவர் என ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் உடவளவ பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.