2024 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இணையவழி பாதுகாப்புச் சட்டம் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைய விரைவில் திருத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
“பொது பாதுகாப்பு அமைச்சு, சுகாதாரம் மற்றும் ஊடகம் மற்றும் நீதி அமைச்சின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழுவொன்று இதற்காக நியமிக்கப்பட்டுள்ளது.

மூன்று அமைச்சுகளும் இணைந்து சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று (04) சபையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார்.
இன்றுவரை ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் எவரும் கைது செய்யப்படவில்லை அல்லது தண்டிக்கப்படவில்லை என்று அமைச்சர் சபையில் கூறினார்.