வெலிகம பொலிஸின் பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இன்று (04) காலை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
வெலிகம, பெலேன பகுதியில் உள்ள உணவகமொன்றுக்கு அருகில் 2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக அப்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட எட்டு பேரைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.

இதற்கமைய, குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.