புதிய இணைப்பு
பாடசாலை மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கிய இலங்கை போக்குவரத்து சபையின் ஹட்டன் பேருந்து நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
முதல் இணைப்பு
ஹட்டன் அரசு பஸ் நடத்துநர் ஒருவர் கினிகத்தேனை தமிழ் பாடசாலை மாணவர்களைப் பஸ்ஸில் இருந்து பலாத்காரமாக வெளியேற்றியுள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் அரச பஸ்களில் பருவகால சீட்டுகளைப் பெற்ற தமிழ் பாடசாலை மாணவர்களைப் புறக்கணிக்கும் நிலைமை நீண்ட காலமாக தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேசமயம் இதே போன்ற நிலைமை நாட்டிலுள்ள பல மாவட்டங்களிலும் குறிப்பாக, மட்டக்களப்பு மயிலம்பாவெளி பகுதியில் காலை வேளையில் பாடசாலை செல்லும் மாணவர்களை ஏற்றிச்செல்லாமல் அரச பேருந்துகள் பயணிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.