சர்வதேச பெண்கள் தினத்தையிட்டு மட்டக்களப்பு அழகு கலை அமைப்பு கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தில் மட்டு மத்திய பஸ்தரிப்பு நிலையத்தை சிரமதானம் செய்யும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை (08) இடம்பெற்றது.
தேசிய மக்கள் சக்தி மட்டக்களப்பு மாவட்ட மகளீர் அமைப்பின் தலைவியும் மாவட்ட அழகு கலை அமைப்பின் தலைவியுமான வனிதா செல்லப்பெருமாள் தலைமையில் இடம்பெற்ற இந்த கிளீன் சிறிலங்கா சிரமதான பணியில் கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் யு.கே.எம். அப்துல்லா கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

இதனை தொடர்ந்து அழகு கலை அமைப்பு மத்திய பஸ்தரிப்பு நிலையத்தை சுற்றி சிரமதானம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.



