காஸாவைக் கைப்பற்றினால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சொத்துகள் சூறையாடப்படும் என்று பாலஸ்தீனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஹமாஸின் பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும், காஸாவை மத்திய கிழக்கின் சுற்றுலாத் தளமாக மாற்ற இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் – காஸா போர் நிறுத்தத்துக்கான தனது முன்மொழிவைக் கூறியிருந்தார்.

காஸாவைக் கைப்பற்றவிருப்பதாக டிரம்ப் சமீபத்திய கருத்துகளுக்கு பதிலளிக்கும் விதமாக, ஸ்காட்லாந்தில் உள்ள டிரம்ப்புக்கு சொந்தமான டர்ன்பெர்ரி கோல்ஃப் மைதானத்துக்குள் புகுந்த சில பாலஸ்தீன ஆதரவாளர்கள், மைதானத்தை சேதப்படுத்தினர்.
`காஸா விற்பனைக்கு அல்ல’ என்றும் இது டிரம்பின் திட்டங்களுக்கு நேரடி பதில் என பெயின்டால் புல்தரையில் எழுதியுள்ளனர்.
அதுமட்டுமின்றி, `காஸாவைக் கைப்பற்ற நினைத்தால், டிரம்ப்பின் சொத்துக்கள் சூறையாடப்படும்’ என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.