2023 ஆம் ஆண்டு மாத்தறை, வெலிகம பகுதியில் ஹோட்டல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தன்னை கைது செய்யுமாறு நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இரத்து செய்யுமாறு கோரி முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், தனது சட்டத்தரணி ஊடாக சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த ரிட் மனு சிவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதவான் மடுல்ல முன்னிலையில் இன்று திங்கட்கிழமை (10) பரிசீலிக்கப்பட்டது.
இதன்போது, சிவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதவான் மடுல்ல, தேசபந்து தென்னக்கோனின் ரிட் மனு எதிர்வரும் 12 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உத்தரவிட்டுள்ளார்.