கடவுச்சீட்டுகளை விநியோகிப்பதற்கான 24 மணித்தியால சேவையின் கீழ் நாளாந்தம் 4,000 முதல் 4,500 வரையான கடவுச்சீட்டுகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனூடாக, கடவுச்சீட்டுக்கள் தொடர்பில் தற்போது நிலவும் பிரச்சினைகளை நிவர்த்திப்பதற்கு முடியும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு கூறியுள்ளது.

24 மணி நேர சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள திங்கட்கிழமை முதல் வௌ்ளிக்கிழமை வரையான காலப்பகுதிக்குள் முன் பதிவு செய்ய வேண்டும்.
திங்கட்கிழமை காலை 6 மணி முதல், வௌ்ளிக்கிழமை நண்பகல் 12 மணி வரை இவ்வாறு முன் பதிவு செய்ய முடியும்.
கடவுச்சீட்டுகளை விநியோகிக்கும் செயன்முறையை விரைவுபடுத்துவதற்காக ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டுகளை கோருபவர்களுக்கு 24 மணித்தியாலங்களுக்குள் அந்த சேவையை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.