Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புலிகளால் கொல்லப்பட்ட அல்ஃபிரட் துரையப்பாவின் பேத்தி கனடாவில் சுட்டுக்கொலை

புலிகளால் கொல்லப்பட்ட அல்ஃபிரட் துரையப்பாவின் பேத்தி கனடாவில் சுட்டுக்கொலை

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கனடாவின் மார்க்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவர் கடந்த 7ஆம் தேதி வெள்ளிக்கிழமை உயிரிழந்ததாக கனடாவின் சிபிசி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் விடுதலைப்புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட, யாழ்ப்பாணத்தின் முன்னாள் மேயர் அல்ஃபிரட் துரையப்பாவின் பேத்தியான ரகுதாஸ் நீலாட்சி என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் வசித்தவர் என்றும் , இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கனடா சென்றுள்ளார் எனவும் தெரியவருகிறது.

இந்த வீட்டில் இதற்கு முன்பு மூன்று முறை துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிசார் தெரிவித்தனர். அது 2024 பிப்ரவரியில் ஒரு முறையும், மார்ச் மாதம் இரண்டு முறையும் ஆகும். ஒவ்வொரு முறையும் சந்தேக நபர்கள் தொலைவில் இருந்து வீட்டை நோக்கி சுட்டுள்ளனர். எந்த சந்தர்ப்பத்திலும் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேக நபர்களை கைது செய்ய முடியவில்லை.

வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் ரகுதாசன் நிலாட்சி உயிரிழந்தார் மற்றும் அதே வீட்டில் இருந்த 26 வயது இளைஞர் பலத்த காயத்துக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது காயங்கள் ஆபத்தானவை என்றாலும் உயிருக்கு ஆபத்தில்லை என பொலிசார் தெரிவித்தனர்.

வீட்டின் பாதுகாப்புக்காக இருந்த ஜெர்மன் ஷெப்பர்ட் வகை நாய் ஒன்றையும் துப்பாக்கிதாரிகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய பிறகு, நவீன ரக கேப் வண்டியில் நான்கு பேர் தப்பிச் சென்றமை சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளதாக கனடா போலீசார் தெரிவித்தனர்.

இதுவரை எந்த சந்தேக நபரும் கைது செய்யப்படவில்லை, பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திட்டமிட்ட கொலை என கருதி விசாரணை நடத்தி வருவதாகவும், கொலைக்கான காரணம் என்ன என்பதை சொல்ல இன்னும் கால அவகாசம் தேவை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சாதாரண தரப் பரீட்சையில் சித்திபெற்ற மற்றும் பெறாத மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவிப்பு
செய்திகள்

சாதாரண தரப் பரீட்சையில் சித்திபெற்ற மற்றும் பெறாத மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவிப்பு

May 19, 2025
முஸ்லிம் காங்கிரஸின் காரைதீவு பிரதேச சபை பட்டியல் ஆசனம் சுழற்சி முறையில் இருவருக்கு
அரசியல்

முஸ்லிம் காங்கிரஸின் காரைதீவு பிரதேச சபை பட்டியல் ஆசனம் சுழற்சி முறையில் இருவருக்கு

May 19, 2025
திருகோணமலை பகுதியொன்றில் துப்பாக்கிச்சூடு; இரண்டு மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரை
செய்திகள்

திருகோணமலை பகுதியொன்றில் துப்பாக்கிச்சூடு; இரண்டு மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரை

May 19, 2025
ஓட்டமாவடி-நாவலடி பிரதான வீதியில் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

ஓட்டமாவடி-நாவலடி பிரதான வீதியில் விபத்து; ஒருவர் உயிரிழப்பு

May 19, 2025
தேசிய போர்வீரர் தினத்தையொட்டி முப்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
செய்திகள்

தேசிய போர்வீரர் தினத்தையொட்டி முப்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

May 19, 2025
சீரற்ற காலநிலை காரணமாக 4 மாவட்டங்களில் 685 பேர் பாதிப்பு
செய்திகள்

சீரற்ற காலநிலை காரணமாக 4 மாவட்டங்களில் 685 பேர் பாதிப்பு

May 19, 2025
Next Post
யாழில் இலஞ்சம் வாங்கிய பொலிஸ் உயர் அதிகாரியின் மகனை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

யாழில் இலஞ்சம் வாங்கிய பொலிஸ் உயர் அதிகாரியின் மகனை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு