2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்த முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
பரீட்சைகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளங்களில் ( www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk) உள்நுழைந்து சரியான குறியீட்டு எண்ணை உள்ளிடுவதன் மூலம் முடிவுகளைப் பெறலாம் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.