போதைப்பொருள் குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்டு குவைத்தில் தூக்கிலிடப்பட்ட இலங்கையர் ஒருவரின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்ய நேற்று புதன்கிழமை (02) நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, சடலம் தொடர்பில் விசாரணை தொடங்கியபோது, இறந்தவரின் மனைவிகள் என்று கூறி மூன்று பெண்கள் அங்கு பிரசன்னமாகியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.
உயிரிழந்தவர் அநுராதபுரத்தைச் சேர்ந்த 46 வயதுடையவராவார். இவருக்கு கடந்த 27 ஆம் திகதி மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், சடலம் தொடர்பில் விசாரணை தொடங்கியபோது, இறந்தவரின் மனைவிகள் என்று கூறி மூன்று பெண்கள் அங்கு பிரசன்னமாகியுள்ளனர். இவர்களில் ஒருவர் ஓமானில் தொழில் புரிபவரென தெரிய வருகிறது.
இந்தப் பெண் தூக்கிலிடப்பட்ட நபரை திருமணம் செய்து 17 வருடங்கள் ஆவதாகவும் இரண்டு குழந்தைகளுக்கு தாய் எனவும் தெரியவந்துள்ளது.
இருப்பினும், அங்கு நிலவும் கடும் வெப்பம் காரணமாக குறித்த சடலத்தின் பிரேத பரிசோதனை பணிகள் இன்று வியாழக்கிழமை (03) வரை ஒத்திவைக்கப்பட்டது.