மட்டக்களப்பு கூளாவடி பிரதேசத்தில் இடியப்பம், பிட்டு, தோசை போன்ற உணவு பொருட்களை விற்பனை செய்துவரும் உணவுக்கடைகளை, பொது சுகாதார பரிசோதகர்கள் நேற்று (11) இரவு முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பு மற்றும் மனித பாவனைக்கு உதவாத உணவு விற்பனையில் ஈடுபட்ட 13 கடைகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளதாக பொது சுகாதர பரிசோதகர் தெரிவித்தார்.

மாவட்ட சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் ஆர். முரளீஸ்வரன் ஆலோசனைக்கு அமைய கோட்டமுனை மற்றும் இருதயபுரம் பொதுசுகாதார பரிசோதகர்களான எஸ்.கஜானந்தன், என்.கருணாகரன், ரி.மிதுன்ராஜ், யே. யசேதரன், ரி.பகீரதன் ஆகிய பொது சுகாதார பரிசோதகர்கள் சம்பவதினமான நேற்று இரவு கூளாவடி பிரதேசத்திலுள்ள இரவில் இடியப்பம், புட்டு, தோசை போன்ற உணவு பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை முற்றுகையிட்டனர்
இதன்போது சுகாராமற்ற முறையில் உணவு தயாரித்த மற்றும் மனித பாவனைக்கு உதவாத உணவு வகைகளை விற்பனை செய்து வந்த 13 கடைகளை கண்டுபிடித்து அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்குல் செய்ததுடன், பாவனைக்கு உதவாத பாத்திரங்களை மீட்டனர்.


