Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிக்குவை கொலை செய்த சம்பவத்துடன் குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

பிக்குவை கொலை செய்த சம்பவத்துடன் குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

2 years ago
in செய்திகள்

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சீதுவ, வெத்தேவ பகுதியில் உள்ள விகாரையின் பிக்குவை கொலை செய்தமை மற்றும் பொருட்களை திருடிய சம்பவங்களுடன் குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

2022ஆம் ஆண்டு 9ஆம் மாதம் 14ஆம் திகதி இந்தக் குற்ற செயல் நடந்ததாகவும், சீதுவ பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கொலை தொடர்பான விசாரணைகளில், அதே விகாரையில் வசித்து வந்த ஒரு துறவி இந்தக் கொலையை செய்ததாகவும், அந்தத் துறவியுடன் தொடர்பு வைத்திருந்த வெளிநாட்டில் வசிக்கும் பெண் இந்தக் கொலையை செய்ய சதித்திட்டம் தீட்டியதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் தொடர்பான தகவல்களை பொலிஸர் நீதிமன்றத்தில் தெரிவித்து, சந்தேக நபருக்கு எதிராக விமானப் பயணத் தடையைப் பெற்றனர்.

அதற்கமைய, இந்த சந்தேக நபர் நேற்று முன்தினம் (09) காலை டுபாயில் இருந்து நாட்டிற்கு வந்தவுடன் விமான நிலைய குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விமான நிலைய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மினுவங்கொட பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை சீதுவை பொலிஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிர்ப்பு; செப்டம்பர் 24 அன்று எதிர்க்கட்சி ஒன்றுகூடல்
செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிர்ப்பு; செப்டம்பர் 24 அன்று எதிர்க்கட்சி ஒன்றுகூடல்

September 19, 2026
டெலிகிராம் மூலம் பண மோசடியில்  ஈடுபட்ட பெண் ஒருவர் கைது!
செய்திகள்

டெலிகிராம் மூலம் பண மோசடியில்  ஈடுபட்ட பெண் ஒருவர் கைது!

September 19, 2026
ரயில் நிலைய அதிபர்களின் வேலைநிறுத்தம் நள்ளிரவுடன் நிறைவு!
செய்திகள்

ரயில் நிலைய அதிபர்களின் வேலைநிறுத்தம் நள்ளிரவுடன் நிறைவு!

September 19, 2026
ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

September 18, 2026
தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!

September 18, 2026
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!
செய்திகள்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!

September 18, 2026
Next Post
அனுராதபுரம் நகரத்தில் பொருத்தப்பட்ட 47 கெமராக்கள் செயலிழப்பு

அனுராதபுரம் நகரத்தில் பொருத்தப்பட்ட 47 கெமராக்கள் செயலிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு