Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!

தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தோட்டப்புறப் பகுதிகளைச் சார்ந்த பாடசாலைகளை மேம்படுத்துவது அரசாங்கத்தின் பிரதான கல்வி இலக்குகளில் ஒன்றாகும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். 

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தில் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளுக்காக நடத்தப்பட்ட தோட்டப்புற பாடசாலைகள் அபிவிருத்திப் பட்டறையில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

மாணவர்களுக்கான கற்றல்-கற்பித்தல் செயற்திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும்போது தோட்டப்புறப் பாடசாலைகள் எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் அபிவிருத்தி முன்னுரிமைகளைக் கண்டறிந்து, தோட்டப்புற பாடசாலைகளுக்கான அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிக்கும் நோக்கில் இந்தப் பட்டறை நடத்தப்பட்டது. 

தோட்டப்புற பாடசாலைகளின் அபிவிருத்திக்காக புதிய திட்டங்களை ஆரம்பிப்பது, தேசிய மூலோபாய மற்றும் திட்டமிடல் திணைக்களத்தின் மாதிரிக்கு ஏற்ப திட்ட முன்மொழிவுகளைத் தயாரிப்பது, தொழிற்கல்வி மற்றும் சுகாதார மேம்பாடு ஆகியவற்றை மையமாகக் கொண்ட அரசாங்கத்தின் வேலைத்திட்டம் குறித்து அங்கு வருகை தந்திருந்த அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

இவ்வேலைத்திட்டங்களை கள மட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான முன்மொழிவுகளும் கருத்துக்களும் இங்கு ஆராயப்பட்டன. 

மேலும், ஆசிரியர்களுக்கான வீடுகளை அமைத்தல், 34 பாடசாலைகளுக்கு புதிய கட்டிடங்களை அமைத்தல், 23 பாடசாலைகளுக்கு பாதுகாப்பு மதில்களை அமைத்தல் போன்ற தோட்டப் பாடசாலைகளின் அபிவிருத்திக்காக அமைச்சரவை அனுமதி பெற்றுள்ள திட்டங்கள் குறித்தும் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது. 

அத்துடன், ஆசிரியர் பற்றாக்குறை, ஆசிரியர் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் மாணவர் நலன்புரி போன்ற துறைகளின் அபிவிருத்தி தொடர்பான எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்தும் இங்கு விரிவாக வலியுறுத்தப்பட்டது. 

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர், ஒவ்வொரு துறையிலும் மலையக சமூகம் ஒரு சமூகமாக முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பதில் அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளதாகக் கூறினார். 

அத்துடன், தோட்டப்புறப் பகுதிகளிலிருந்து தமிழ் மொழி மூல ஆசிரியர்களை அதிகளவில் உள்வாங்குவதற்கான திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதால், அதற்காக அப்பகுதிகளைச் சார்ந்த ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளை மேம்படுத்த வேண்டும் என்றும், கொட்டகலை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையைக் கட்டியெழுப்புவது அந்தப் பணியின் முதன்மை நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

September 18, 2026
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!
செய்திகள்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!

September 18, 2026
இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்
செய்திகள்

இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்

September 18, 2026
சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்
செய்திகள்

சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்

September 18, 2026
வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!
செய்திகள்

வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!

September 18, 2026
அனோஜனது மரணதண்டனையை இரத்துச்செய்ய தலையிடுமாறு கஜேந்திரகுமார் கோரிக்கை
செய்திகள்

அனோஜனது மரணதண்டனையை இரத்துச்செய்ய தலையிடுமாறு கஜேந்திரகுமார் கோரிக்கை

September 18, 2026
Next Post
ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.