மீண்டும் இரத்த ஆறு ஓடும் என தமிழர்களை மிரட்டும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இனவாதத்தை கக்கியுள்ளமை அவரின் அரசியல் வங்குறோத்தை வெளிப்படுத்தியுள்ளது என்றும் சமஸ்டி வழங்கப்படா விட்டால் சிங்களவர் வெளிநாடுகளுக்கு ஓடுவதை கம்மன்பில விரைவில் பார்ப்பார் என்றும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்தார்.
சமஷ்டி தீர்வை தொடர்ந்து வலியுறுத்தினால் மீண்டும் இரத்த ஆறு ஓடும் என்று வழமையான
பாணியில் இனவாதத்தை ஊடகங்களில் கம்மன்பிலகக்கியுள்ளார் என தெரிவித்தார். தென்னிலங்கையில்
குறிக்கப்பட்ட சிங்களமக்களை தங்கள் பக்கம் திருப்பிதங்கள் பாராளுமன்ற கதிரைகளை தொடர்ந்தும் சூடாக்க இனவாத கருத்துக்களை கம்மன்பில உள்ளிட்டசிலர் பயன்படுத்தமுனைவதன் வெளிப்பாடே
தமிழர்களின் அபிலாசைகளை, ஐனநாயக வெளிப்பாடுகளை இனவாதமாக சித்தரித்தல்
என்று குறிப்பிட்டார்.
இது 1956ம் ஆண்டில் இருந்து இன்று வரை இலங்கைத் தீவில் தொடர்கிறது. இதன் அறுவடையை 2019 ஆண்டின் பின்னர் நாட்டு மக்கள் அனைவரும் மிகப் பாரிய பொருளாதார பின்னடைவு நாட்டை தொடர்ந்து மிகப் பாரிய பின்னடைவுக்குள் தள்ளியுள்ளது என்றார்.
நாடு மீண்டெழ முடியாத நிலைக்குள் பொருளாதாரம் முடங்கி விட்டது. பிச்சை எடுத்தும் இருக்கும்
நிலபுலங்களை விற்றும் படம் காட்டுகிறார் ஐனாதிபதி ரணில். இந்த நிலையில் மீண்டும்
இரத்த ஆறு ஓடும் என தமிழர்களை மிரட்டுவது கம்மன்பிலவின் அரசியல் வங்குறோத்தை வெளிப்படுத்தியுள்ளது என சுட்டிக்காட்டினார்.
நாட்டின் இனப்பிரச்சனைக்கு சிங்கள ஆட்சியாளர் நிரந்தர தீர்வாக சமஸ்டியை
கொடுக்க தவறினால் இன்னும் சிறிது காலத்தில் அன்று தமிழர்கள்சாரை சாரையாக வெளிநாடுகளுக்கு ஓடியது போல தென்னிலங்கையில் சிங்களவர் வெளியேறுவதை கம்மன்பில பார்ப்பார்
என்றார். 1952 ஆண்டில் இருந்து நடைபெற்ற ஒவ்வொரு தேர்தல்களிலும் தமிழ் மக்கள் தங்களது
அபிலாசையாக ஐனநாயக ரீதியாக சமஸ்டி தீர்வு வேண்டும் என்றே கோருகின்றனர்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மை தமிழ் மக்களின் ஆணை
வழங்கப்பட்டதை நிராகரிக்கும் சிங்கள பேரினவாத ஆட்சியளர்களின் எதேச்சதிகாரம் ஒட்டும மொத்த நாட்டையும் மீண்டெழ முடியாத நிலைக்கு தள்ளியுள்ளதை வெளிக்காட்டும்
குறியீடாக தென்னிலங்கை சிங்களவர்கள் விரைவில் நாட்டை விட்டு ஓடுவார்கள் என்றார்.