உள்ளுராட்சி தேர்தலில் அனைத்து தமிழ் தேசிய கட்சிகளையும் ஒருங்கிணைத்து தேர்தலில் போட்டியிடுவதற்கான முயற்சிகள் முன்னெடுத்தாலும் சில தமிழ் கட்சிகள் தாங்கள்தான் பெரிய கட்சிகள் என்ற தலைக்கனத்தில் ஒற்றுமைக்கு பங்கம் விளைவித்துள்ளதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பு நகரில் உள்ள தேர்தல் அலுவலத்தில் கட்டுப்பணம் செலுத்த சென்றிருந்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாநகரசபை உட்பட 11 உள்ளுராட்சி சபைகளில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி நகர சபை தவிர அனைத்து பிரதேச சபைகள், நகர சபை, மாநகர சபை உட்பட அனைத்து சபைகளிலும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி போட்டியிடுகின்றது.

கடந்த காலங்களிலே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஒற்றுமையாக செயற்பட்டது போன்று இந்த தேர்தலிலும் ஒற்றுமையாக செயல்பட்டு கூடுதலான அங்கத்துவத்தை பெற்று, இந்த சபைகள் அமைவதற்கு நாங்கள் ஒரு முக்கிய சக்தியாக திரள்வோம் என்பதில் எந்த விதமான ஐயப்பாடும் இல்லை.
கடந்த பாராளுமன்றத் தேர்தலிலே உண்மையிலேயே ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணிக்கு ஒரு பாரிய வீழ்ச்சி ஏற்பட்டது. தற்போது மட்டக்களப்பு மாவட்ட மக்கள் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தாங்கள் விட்ட தவறை தற்போது உணர்ந்து கொண்டு வருகின்றார்கள்.
ஏனென்றால் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பெற்ற தேசிய தமிழ் தேசியக் கட்சிகளாக இருந்தாலும் சரி, தேசியக் கட்சிகளாக இருந்தாலும் சரி தமிழ் மக்களுக்கு எந்தவிதமான எதிர்கால திட்டங்களோ அல்லது எந்த விதமான ஒரு தீர்வுக்கு திட்டங்களோ இல்லாத மாதிரி தங்களுக்குள்ளே அடிபடும் ஒரு சூழ்நிலை உருவாகி இருக்கின்றது.
அந்த வகையில் தமிழ் மக்கள் தாங்கள் விட்ட தவறை தற்போது உணர்ந்து கொண்டு வருகின்றார்கள். அந்த வகையில் தமிழ் மக்களுக்கான தமிழ் தேசியத்திற்கான ஒரே அமைப்பாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை மக்கள் ஆதரிப்பதற்கும், ஆட்சியை அமைப்பதற்கும் உறுதுணையாக இருப்பதற்கு தற்போது தீர்மானித்திருக்கின்றார்கள் என்பது எங்களுக்கு தெரிகின்றது.
அந்த வகையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அனைத்து சபைகளிலும் கூடுதலான அங்கத்தவர்களை பெறுவோம் என்பதில் எந்த விதமான ஐயப்பாடும் இல்லை.

இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலை பொருத்தமட்டில் எந்த கட்சியும் எந்த கட்சிக்கும் சவாலாக இருக்கப் போவதில்லை. கூடுதலாக ஒவ்வொரு வட்டாரத்திலும் நிறுத்த வேட்பாளர்களை பொருத்தும் இருக்கின்றது. இந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் எங்களை பொருத்தமட்டிலே யாரையும் நாங்கள் சவாலாக இருப்பார்கள் என்பதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இந்த சவால்களை சந்திப்பதற்கு நாங்கள் தயாராகத்தான் இருக்கின்றோம். ஏனென்றால் 40 வருடங்களுக்கு மேலாக பல சவால்களை ஆயுத ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பல சவால்களை சந்தித்துகொண்டுவரும் எங்களுக்கு இது ஒரு பெரிய சவாலாக தெரியாது.
தேசிய மக்கள் சக்தியானது சபைகளை கைப்பற்றும் என்பது அது ஒரு பகல் கனவாக அமையும் என்றுதான் நான் நினைக்கின்றேன். ஏனென்றால் வடகிழக்கிலே தமிழ் மக்கள் கடந்த பாராளுமன்ற தேர்தலில் விட்ட தவறை தற்போது உணர்ந்திருக்கின்றார்கள், உணர்ந்து கொண்டு வருகின்றார்கள் என்பதை நான் முன்னவே கூறி இருக்கின்றேன்.
அந்த வகையில் அவர்களுக்கு ஒரு பெரிய பாதிப்பு இந்த தேர்தலிலே தமிழ் மக்களிடமிருந்து கிடைக்கும்.
தற்போதைய பொருத்தமட்டிலே எந்த விதமான கட்சிகளும் உள்வாங்கப்படவில்லை. தற்போது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் அங்கத்துவ கட்சிகளாக இருக்கும் கட்சிகள் மாத்திரம் தான் இந்த கூட்டிலே இருக்கின்றது.
நாங்கள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை பொருத்தமட்டிலே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு பிரதானமான அங்கமாக இருந்த நாங்கள் இன்றும் எங்களுடைய பெயர் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியாக இருக்கின்றது தவிர நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பாக இருக்கின்றோம். இந்த தேர்தலிலும் அனைத்து தமிழ் தேசிய கட்சிகளையும் ஒன்றிணைத்து நாங்கள் இந்த தேர்தலை சந்திப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தோம்.
ஆனால் சில தமிழ் தேசிய கட்சிகள் அடம்பிடித்து அவர்களது தனித்துவத்தை காட்டி தாங்கள் தனித்துப் போட்டியிட வேண்டும் என்கின்ற அந்த நிலைப்பாட்டிலும் தாங்கள்தான் பெரிய கட்சி என்கின்ற தலைக்கனத்திலும் அவர்கள் அந்த ஒற்றுமைக்கு பங்கம் விளைவித்திருக்கின்றார்கள்.