Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வொய்ஸ் ஒ∴ப் அமெரிக்கா என்னும் வானொலி ஊடகத்தை செயலிழக்க உத்தரவிட்ட ட்ரம்ப்

வொய்ஸ் ஒ∴ப் அமெரிக்கா என்னும் வானொலி ஊடகத்தை செயலிழக்க உத்தரவிட்ட ட்ரம்ப்

1 year ago
in உலக செய்திகள், செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்டிரம்பின் உத்தரவை தொடர்ந்து அமெரிக்க அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இயங்கும் வொய்ஸ் ஒ∴ப் அமெரிக்கா செயல் இழக்கும் நிலை உருவாகியுள்ளது.

வொய்ஸ் அமெரிக்கா தனக்கு எதிரானது, தீவிரவாத போக்குகொண்டது என குற்றம்சாட்டியுள்ள ட்ரம்ப், அதனை செயல் இழக்க செய்யும் உத்தரவில் கைச்சாத்திட்டுள்ளார்.

டிரம்பின் இந்த உத்தரவு வரிசெலுத்துவோர் இனி தீவிரபிரச்சாரங்களிற்கு அடிமையாகாமல் இருப்பதை உறுதி செய்யும் என தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை, தனது அறிக்கையில் வொய்ஸ் ஒவ் அமெரிக்காவை விமர்சித்து அரசியல்வாதிகள் வலதுசாரி ஊடகங்கள் தெரிவித்த கருத்துக்களை இணைத்துக்கொண்டுள்ளது.

வொய்ஸ் ஒ∴ப் அமெரிக்கா இரண்டாம் உலக யுத்தத்தின் போது நாசிகளின் பிரச்சாரத்தை எதிர்கொள்ள வொய்ஸ் ஒவ் அமெரிக்கா வானொலி சேவையாக உருவாக்கப்பட்டது. ஒருவாரத்திற்கு சர்வதேச அளவில் மில்லியன் கணக்கான மக்களை சென்றடைவதாக வொய்ஸ் ஒவ் அமெரிக்கா தெரிவிக்கின்றது.

வொய்ஸ் ஒ∴ப் அமெரிக்காவின் பணியாளர்கள் 1300 பேரும் சம்பளத்துடன் விடுப்பு நிலையில் உள்ளதாக அதன் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

டிரம்பின் உத்தரவு வொய்ஸ் ஒவ் அமெரிக்கா அதன் முக்கியமான பணியை செய்யமுடியாமல் செய்துள்ளது, அமெரிக்காவின் எதிர் நாடுகளான ரஸ்யா, ஈரான் ,சீனா போன்றவை அமெரிக்காவை அவமதிப்பதற்காக , அவமானத்தை ஏற்படுத்துவதற்கான கதையாடல்களை உருவாக்குவதற்கு மில்லியன் டொலர்களை செலவிடும் நேரத்தில் எங்களால் அதற்கு எதிரான முக்கியமான பணியைமுன்னெடுக்க முடியாமல் உள்ளது என வொய்ஸ் ஒ∴ப் அமெரிக்காவின் இயக்குநர் மைக் அப்ரமோவிட்ஸ் தெரிவித்துள்ளார்.

அதேவேளை டிரம்பின் இந்த உத்தரவு சுதந்திரமான ஊடகங்கள் குறித்த அமெரிக்காவின் நீண்ட கால அர்ப்பணிப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என அமெரிக்காவின் தேசிய ஊடக கழகம் நஷனல் பிரஸ் கிளப் தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!
செய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!

September 8, 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்
செய்திகள்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்

September 8, 2026
பேத்தாழை விபுலானந்தா கல்லூரி பழைய மாணவர் விளையாட்டு நிகழ்வுகள் சிறப்பாக நிறைவு!
செய்திகள்

பேத்தாழை விபுலானந்தா கல்லூரி பழைய மாணவர் விளையாட்டு நிகழ்வுகள் சிறப்பாக நிறைவு!

September 8, 2026
கந்தளாயில் லொறி மீது மின் கம்பம் முறிந்து விழுந்து விபத்து!
செய்திகள்

கந்தளாயில் லொறி மீது மின் கம்பம் முறிந்து விழுந்து விபத்து!

September 8, 2026
தாய்லாந்து விசா அற்ற அனுமதி ரத்து; காரணம் இலங்கையர்களின் சட்டவிரோத செயல்கள்: அமைச்சர் விஜித ஹேரத்!
செய்திகள்

தாய்லாந்து விசா அற்ற அனுமதி ரத்து; காரணம் இலங்கையர்களின் சட்டவிரோத செயல்கள்: அமைச்சர் விஜித ஹேரத்!

September 8, 2026
செவிப்புலன் வலுவிழந்தோருக்கு புதிய 119 சேவை – வாட்ஸ்அப் வீடியோ மூலம் முறைப்பாடு சமர்ப்பிக்கலாம்!
செய்திகள்

செவிப்புலன் வலுவிழந்தோருக்கு புதிய 119 சேவை – வாட்ஸ்அப் வீடியோ மூலம் முறைப்பாடு சமர்ப்பிக்கலாம்!

September 8, 2026
Next Post
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை தாதி உத்தியோகஸ்தர்கள் ஆர்ப்பாட்டம்

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை தாதி உத்தியோகஸ்தர்கள் ஆர்ப்பாட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு