மாத்தளை, யடவத்த அருகே உள்ள நீர்வீழ்ச்சியில், சுமார் 400 அடி உயரத்தில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தெமட்டகொட பகுதியில் வசிக்கும் 23 வயதுடைய இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த இளைஞன் கடந்த 15 ஆம் திகதி இரவு சலகம தோட்டத்தின் ஹுலங்கல பகுதியில் நான்கு இளைஞர்களுடன் தங்கியிருந்துள்ளார்.

இதன் பின்னர், இந்தக் இளைஞனர்கள் குழு நேற்று (16) காலை 7.00 மணியளவில் சம்பவ இடத்திற்கு சென்றுள்ள வேளையில் உயிரிழந்த குறித்துக் நபர், திடீரென ஓடத் தொடங்கி பின்னர் தாழ்வான காட்டுப் பகுதியில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், குறித்த இளைஞனின் உடலின் பாகங்கள் காட்டுப் பகுதியில் சிதறிக் கிடந்ததாக கிராம மக்கள் தெரிவித்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் மஹாவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.