ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா பயணத்தினை மேற்கொண்டிருந்த சுற்றுலா பயணி ஒருவர் தவறவிட்ட பயணப் பையை பொலிஸார் மீட்டுக் கொடுத்துள்ளனர்.
ரஷ்ய சுற்றுலா பயணி ஒருவரே கொழும்பு கோட்டையிலிருந்து தனியார் பேருந்தில் அநுராதபுரம் சென்ற போது தனது பயணப் பை தவறவிட்டுள்ளார்.

இதனையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை (14) அநுராதபுரம் சுற்றுலா பொலிஸ் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்தநிலையில், பல கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்ட சுற்றுலா பொலிஸார் வவுனியாவுக்கு செல்லும் பேருந்தில் பயணப் பை ஒன்று இருப்பதாக தகவல் அறிந்தனர்.
இதன் பின்னர் பொலிஸார் பயணப் பையை மீட்டு சுற்றுலாப் பயணியிடம் கையளித்துள்ளனர்.