மட்டக்களப்பு மாவட்டத்தில் பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் தேர்தல் மத்தியஸ்தான இந்து கல்லூரியில் இருந்து வாக்கு சாவடிகளுக்கு வாக்கு பெட்டிகள் வாக்குசீட்டுக்கள் இன்று (05) காலை 9.00 எடுத்துச் செல்லும் நடவடிக்கையினை மாவட்ட உதவி தேர்தர் ஆணையாளர் எம்.பி. எம். சுபியான் மற்றும் தெருவத்தாட்சியும் அரசாங்க அதிபர் திருமதி முரளீதரன் தலைமையில் ஆரம்பித்து வைப்க்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 2 நகரசபை 1 மாநகரசபை 9 பிரதேச சபை உட்பட 12 உள்ளுராட்சி மன்றங்களில் உள்ள 144 வட்டாரங்களில் இருந்து 146 பேர் தெரிவு செய்யப்படவுள்ளதுடன், போனஸ் ஆசனம் உட்பட மொத்தமாக 274 பேர் தெரிவுக்காக தேர்தலில் 11 அரசியல் கட்சிகள் சுயேச்சைக்குழுக்கள் உட்பட 101 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளதுடன் 4 இலச்சத்து 55 ஆயிரத்து 520 வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன் 444 வாக்களிப்பு நிலையங்களில் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

இந்த தேர்தலுக்கான வாக்கு பெட்டிகள் வாக்கு சீட்டுக்கள் எடுத்துச் செல்லும் நடவடிக்கை இன்று காலை 9.00 மணிக்கு தேர்தல் மத்தியஸ்தானமான இந்து கல்லூரியில் இருந்து வாக்களிப்பு நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.

இந்த தேர்தலையடுத்து மாவட்டத்தில் நகர் மற்றும் முக்கிய சந்திகளில் பாதுகாப்பு படையினர் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றதுடன், இதுவரை 353 தேர்தல் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் இதில் 90 வீதமான முறைப்பாடுகள் தீர்க்கப்பட்டுள்ளதாக மாவட்ட உதவி தேர்தர் ஆணையாளர் எம்.பி. எம். சுபியான் தெரிவித்தார்.

