இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டியிடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையாளர் நாயகத்துக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி அனுப்பி வைத்த கடிதத்தில் இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில், இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலை தமிழர் விடுதலைக் கூட்டணி தவிர்க்க முடியாத காரணத்தினால் நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்ய முடியவில்லை என தெரிவிக்கிறோம் என்றுள்ளது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிர்வாகம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.