சமாளிப்பதற்கு மிகவும் மோசமான நாடாக கனடா உள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் வர்த்தகப் பதற்றம் அதிகரித்து வருகின்றது.
கனடா மற்றும் அமெரிக்கா மாறி மாறி நாடுகளுக்கு இடையேயான வரிகளை அதிகரித்து வருகின்றது.
அத்துடன், கனேடியர்கள் அமெரிக்க தயாரிப்புகளைப் புறக்கணிக்கவும் தொடங்கியுள்ளனர்.
இவ்வாறான நிலையிலேயே, நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட ட்ரம்ப் கனடாவை ஒரு மோசமான நாடு என குறிப்பிட்டுள்ளார்.

தான் எல்லா நாடுகளுடனும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புகளை கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்யுள்ளார்.
51ஆவது மாநிலம்
அவற்றுள், கனடாவை சமாளிப்பதே மிகவும் கடினம் என ட்ரம்ப் கூறியுள்ளார்.
மேலும், கனடாவிற்கு 200 பில்லியன் டொலர் மானியத்தை வழங்கி வருவதாகவும் அதனால் கனடா அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாக இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கனடாவின் மின்சாரம், மரக்கட்டைகள் மற்றும் கார்கள் எங்களுக்கு தேவையில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.