சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு பிரதேச செயலக நலன்புரி அமைப்பின் நெறிப்படுத்தலிலும் ஒழுங்குபடுத்தலிலும், பிரதேச செயலாளர எம்.எம். ஆசிக் தலைமையில் லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் நேற்று (19) நடைபெற்றது.
இந்நிகழ்வில் ரமழான் சிந்தனையை சாய்ந்தமருது மஸ்ஜிதுல் ஷபா பள்ளிவாசல் பேஷ் இமாம் எம்.எச்.எப்.எம். றஹ்மதுல்லா மெளலவி நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தராக கடமையாற்றி 2025.02.10 ஆம் திகதி வபாத்தான மர்ஹூம் எம்.எஸ்.எம். அஸ்வர் அவர்களின் மறுமை வாழ்வின் ஈடேற்றத்திற்காக துவா பிராத்தினையும் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரும், பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கெளரவ ஏ.ஆதம்பாவா, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம, அம்பாறை மாவட்ட பிரதம கணக்காளர் ஏ.எம்.எம் மஹ்ரூப், சாய்ந்தமருது முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், பொத்துவில் முன்னாள் பிரதேச செயலாளர் எம்.ஐ.எம். தெளபீக், தென்கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் உட்பட மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், வர்த்தக சங்க மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதானிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.







