ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸநாயக அவர்களின் கிளீன் சிறிலங்கா தேசிய வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஓர் அம்சமாக ‘சுத்தமான கடற்கரை கவர்ந்திழுக்கும் சுற்றுலா தளம் எனும் தொணிப் பொருளிலான நிகழ்சித் திட்டத்தினை மட்டக்களப்பு மாவட்டத்தில் பாசிக்குடாவை அண்மித்த வலைவாடி கிராமத்தின் கடற்கரையை சுத்தம் செய்யும் பணி நேற்று (20) முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன் சமூக செயற்பாட்டாளர் காமினிதர்மசிறி அவர்களினால் பிரதேச மீனவர்களின் போக்குவரத்து நன்மை கருதி கடற்கரைக்கு செல்லும் மணல் வீதிக்கு கிறவல் இடப்பட்டது.
கோறளைப்பற்று பிரதேச பல் சமய ஒன்றியத்தின் மத குருமார்கள், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி திருமதி பாமினி அச்சுதன், பொலிஸ் உயர் அதிகாரிகள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், தேசிய மக்கள் சக்தியின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.





