கொட்டாஞ்சேனை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசேட அறிக்கையொன்றை விடுத்திருக்கும் மகளிர் விவகார அமைச்சு, இந்த விடயம் தொடர்பில் கல்வியமைச்சின் ஊடாக நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்திருக்கிறது.

அதேசமயம் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை ஊடாகவும் பெற்றோரிடம் விபரங்கள் கோர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.