ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்டு 10 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், ரஜினி குறித்து ட்விட்டரில் விமர்சித்து உள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள அவர், “ஒரு ஊரில் ஒரு பழம்பெரும் பருந்து இருந்ததாம். அதனிடம் ‘மிருகம்’ இயக்குனர் Paddy Suriyan.. ஒரு கதை சொன்னாராம். இவரது ‘மருத்துவர்’ ஹிட்டானதால்.. உடனே ஓகே சொன்னதாம் முந்தைய வேட்டைகளில் தோல்வியடைந்த பருந்து.
உங்கள் இளமைக்கால பருந்து கேரக்டரில் எனது நண்பர் CSK நடித்தால் நன்றாக இருக்கும். அவர் உங்கள் தீவிர ரசிகரும் கூட’ என கூறினாராம் Paddy Suriyan. ‘வேணாம். படம் ஹிட்டானால் அவரால்தான் ஓடியது என்று அனைவரும் சொல்வார்கள்’ என்று நோ சொல்லிவிட்டதாம் பருந்து.
முந்தைய படங்களை போல தமிழில் மட்டும் எடுத்தால் சக ஸ்டார்களின் கலக்சனை தொட இயலாது என்பதால் பான் இந்தியா படமாக மாற்ற முடிவு செய்தனராம். ஆனால் ஃபார்மில் இருக்கும் சஞ்சய் தத், விஜய் சேதுபதி, ஃபஹத் பாஸில் உள்ளிட்ட எவரும் வேண்டாம் என்றதாம் பருந்து. காரணம்: படம் ஹிட்டானால் அவரால்தான் ஓடியது என்று அனைவரும் சொல்வார்கள். பிறகு என் கெத்து என்னாவது?’ ஆகவே சக பழம் பருந்துகளான ஜாக்கி, சிவராஜ் ஆகியோரை ஆட்டத்தில் சேர்த்துள்ளதாம். இதற்கு முன்பு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பெரியளவில் பரிச்சயம் ஆகாத நானா படேகர், சுனில் ஷெட்டி ஆகியோரை வில்லனாக சேர்த்தது ஊரறிந்ததே.
நடிகைகளில் தற்போது ட்ரெண்டில் உள்ள ராஷ்மிகா, சமந்தாவை தேர்வு செய்யலாமா?’ என்றதற்கு ‘வேண்டாம். நீலாம்பரியும், சுறா நாயகியுமே போதும்’ என்றதாம் பருந்து. காரணம்: அதேதான். ஆனால் எதிர்பாராத திருப்பமாக சுறா நாயகி ஆடிய பாடல் சூப்பர் ஹிட்டாகி, இவர் பஞ்ச் வைத்து பாடியதாக வரும் இரு பாடல்களும் கண்டுகொள்ளப்படாமல் போனதால் கடும் கடுப்பானதாம் பருந்து.
ஆகவே ட்ரைலரில் ஒரு இடத்தில் கூட சுறா நாயகியின் முகம் தெரியக்கூடாது என்று கட்டளை போட்டு விட்டதாம் பருந்து. காரணம்: அதேதான்.
ஒரு காலத்தில் வில்லன், நாயகி, துணை நடிகர்கள் என அனைவரும் ஸ்கோர் செய்ய வாய்ப்பு அளித்ததால் மட்டுமே பருந்தின் படங்கள் வெற்றியடைந்தன. அப்போது பகிர்ந்து வாழும் காக்கை குணம் பருந்திற்கு இருந்தது. ஆனால் இன்று ‘இங்க எல்லாமே நான்தான். நான் மட்டும்தான்’ என தனியே வானில் சுற்றித்திரிய முடிவெடுத்துள்ளது அப்பருந்து.” என்று குறிப்பிட்டு உள்ளார். ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி தெரிவித்த பருந்து கதையை வைத்து அவரை பருந்து என்றும், மேலும் சில குறியீடுகளை குறிப்பிட்டும் அவர் விமர்சித்துள்ளார்.