திரைப்பட படப்பிடிப்பிற்காக தற்போது இலங்கைக்கு வருகைத்தந்துள்ள இந்திய திரைப்பட நடிகர் ஜெயம் ரவியை இலங்கையின் முன்னாள் மூத்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூரிய சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பு நேற்று (21) கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு குறித்த காணொளியானது தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
திரைப்பட படப்பிடிப்பிற்காக இந்திய திரைப்பட நடிகர் ஜெயம் ரவி உள்ளிட்ட குழுவினர் கடந்த 11ஆம் திகதி இலங்கையை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.

