கடந்த சில ஆண்டுகளாகப் பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கின்றபோதும், இந்திய தேயிலைத்துறை, இலங்கையின் தேயிலைத்துறையை முந்திச்சென்றுள்ளது.
இந்திய தேயிலை சபை வெளியிட்ட தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டில் இந்தியா 254 மில்லியன் கிலோ தேயிலையை ஏற்றுமதி செய்துள்ளது.
இதன் மூலம் உலகின் இரண்டாவது அதிக ஏற்றுமதியாளராக மாறியுள்ளது. உலக தேயிலை ஏற்றுமதியில் கென்யா முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டாலும், இந்தியா இலங்கையை முந்திச்சென்று இரண்டாவது இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

2024ஆம் ஆண்டில் கென்யா 500 மில்லியன் கிலோவுக்கு மேல் தேயிலையை ஏற்றுமதி செய்துள்ளது. 2023ஆம் ஆண்டில், இந்தியாவும் இலங்கையும் சுமார் 231 மில்லியன் கிலோவுடன் தேயிலை ஏற்றுமதியில் போட்டிகளை கொண்டிருந்தன.
எனினும், 2024ஆம் ஆண்டில் இந்தியா 24 மில்லியன் கிலோ கூடுதல் ஏற்றுமதியுடன் இலங்கையை இந்தியா முந்தியுள்ளது.

இந்தநிலையில், இந்தியாவின் 2024 தேயிலை ஏற்றுமதி 7,112 கோடி ரூபாய்களாகும்.
2030ஆம் ஆண்டுக்குள் இந்தியா 300 மில்லியன் கிலோ ஏற்றுமதி என்ற இலக்கை எட்டும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.