யூடியூப் தளத்தில் பெரும் பின்தொடர்பவர்களைக் கொண்ட யூடியூப் சேனலாக இலங்கை சமையல் கலைஞரான சரித் என். சில்வாவின் சேனல் பெற்றுக் கொண்டுள்ளது.
அதன்படி, 10 மில்லியன் சந்தாதாரர்களை கடந்த முதல் இலங்கை சேனலின் உரிமையாளராக இவர் விளங்குகின்றார்.
இலங்கையின் முதல் டயமண்ட் பிளே பட்டனையும் சரித் சொந்தமாக்கிக் கொண்டுள்ளார்.
2020 இல் தொடங்கப்பட்ட யூடியூப் சேனல் 600 க்கும் மேற்பட்ட வீடியோக்களைக் கொண்டுள்ளதுடன் 4 பில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

சரித்தின் தனித்துவமான சமையல் நுட்பங்களும் விளக்கக்காட்சியும் அவரது பிரபலத்திற்கு முக்கிய காரணங்களாகும் என குறிப்பிடப்படுகின்றது.
இந்த மைல்கல்லை எட்டியபோது, சரித் தனது பார்வையாளர்களுக்கு ’10 மில்லியன் கோடி முறை நன்றி’ என்று பதிவிட்டுள்ளார்.
குறிப்பாக யூடியூப் சந்தாதாரர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, வெவ்வேறு ப்ளே பொத்தான்கள் அந்தந்த வரம்புகளுக்கு வழங்கப்படுகிறது.
முதல் 100,000 பார்வையாளர்களுக்கு ப்ளே பட்டன் வெள்ளியாகவும், முதல் மில்லியனுக்கு ப்ளே பட்டன் கோல்ட் ஆகவும், முதல் 10 மில்லியனுக்கு டயமண்ட் ஆகவும் வழங்கப்படும்.
அதன்படி, சரித் அடைய வேண்டிய அடுத்த மைல்கல் ரெட் டயமண்ட் பிளே பட்டன் ஆகும், இதற்காக அவர் 100 மில்லியன் சந்தாதாரர்களை நிறைவு செய்ய வேண்டும்.