நபரொருவரின் உடைமையிலிருந்த பணத்தைத் திருடிய குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜண்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு (30) மாத்தறை மாவட்டத்தின் தெனியாய பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
தெனியாய பேருந்து நிலையத்தில் தனியாக நின்று கொண்டிருந்த நபர் ஒருவரை, இரவு ரோந்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜண்ட் ஒருவர் சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டுள்ளார்.

இதனையடுத்து, குறித்த நபரின் உடைமையில் வைத்திருந்த 21 ஆயிரம் ரூபா பணத்தை பொலிஸ் அதிகாரி திருடிச் சென்றுள்ளமை அந்த நபருக்கு தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து அவர் தெனியாய பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் சார்ஜண்ட், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், அவரிடம் விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.