ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையினால் பிரதேசத்தில் மின் விளக்குகள் இல்லாத வீதிகளுக்கு மின் விளக்குகள் பொருத்தும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந் நடவடிக்கையில் ஒன்றாக நீண்டகாலமாக இருள் சூழ்ந்து காணப்பட்ட வந்தாறுமூலை களுவன்கேணி வீதிக்கும் மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பிரதேச சபை செயலாளர் த.கிருபை ராஜனிடம் வந்தாறுமூலை சிவமுத்துமாரியம்மன் ஆலய நிர்வாகத்தினர் விடுத்த வேண்டுகோளினையடுத்து இவ் நடவடிக்கைகள் இன்று (30) முன்னெடுக்கப்பட்டது.

குறித்த வீதியானது இருள் சூழ்ந்து காணப்பட்ட நிலையில், அவ் வீதியால் வந்தாறுமூலை, களுவன்கேணி, பலாச்சோலை ஆகிய கிராமங்களுக்கு போக்குவரத்தினை மேற்கொள்வோர் பல்வேறுபட்ட அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தனர்.
குறிப்பாக மாலை நேர வகுப்பிற்கு செல்லும் மாணவர்கள் ஆடைத் தொழிற்சாலைகளுக்கு சென்று வீடு திரும்பும் பெண்கள் என பலரும் இரவு வேளைகளில் அச்சத்துடன் தங்களது பயணத்தினை இவ் வீதியினால் மேற்கொண்டிருந்தனர்.
தற்போது செயலாளர் எடுத்த முயற்சியினால் வீதியானது வெளிச்சம் நிறைந்தாக காணப்படுகிறதுடன், இச் செயற்பாட்டினை பாராட்டி பிரதேச மக்கள் தங்களது நன்றியை செயலாளருக்கு தெரிவித்துள்ளனர்.

