கிரான் கமநல சேவைகள் நிலையத்தில் இன நல்லுறவை ஏற்படுத்தும் வகையிலான ‘இப்தார்’ நிகழ்வு கடந்த மாலை (27) நடைபெற்றது.
கிரான் கமநல சேவைகள் அமைப்பின் தலைவர் சி.வவானந்தன் தலைமையில் இவ் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது நோன்பின் முக்கியத்துவம் அதன் ஈருல நன்மைகள் மற்றும் சகல வாழ்வின் முக்கியத்துவம் தொடர்பான விசேட சொற்பொழிவினை பற்றி மௌவி எம்.ரி.எம்.றிஸ்வான் உரையாற்றினார்.
இந் நிகழ்வில் வாழைச்சேனை கமநல சேவைகள் நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.ஜெயக்காந்தன், கிரான் பிரதேச கமநல அபிவிருத்தி உத்தியோத்தர் எம்.ஏ.றசீத் கமக்கார அமைப்புக்களின் மாவட்ட அதிகார சபை தலைவர் ச.சந்திரமோகன் உட்பட கிரான் கமநல சேவைகள் நிலைய உத்தியோகத்தர்கள், பிரதேச விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
கிரான் கமநல சேவை நிலைய அமைப்பானது மாவட்டத்தின் தமிழ்,முஸ்லிம் மக்களிடையே இன நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் இது போன்ற நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடாத்தி வருகின்றமையானது அனைவராலும் பராட்டப்படுகிறது.







