நாட்டில் பல பாங்களிலும் ஷவ்வால் மாதத்திற்கான தலைப் பிறை தென்பட்டதால் நாளை 31ஆம் திகதி இலங்கை வாழ் முஸ்லிம்கள் புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுமாறு பிறைக் குழுவின் தலைவர் அஷ்ஷெய்க் ஹிஸாம் அல் பத்தாஹி உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஹிஜ்ரி 1446 ஷவ்வாள் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று மார்ச் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.
இதன்போதே பிறைக் குழுவின் தலைவர் அஷ்ஷெய்க் ஹிஸாம் அல் பத்தாஹி உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார்.