பெற்றோர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி டிஜிட்டல் உலகில் உலாவுவதால் பிள்ளைகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளதாக கல்வி அமைச்சின் சுகாதாரம் மற்றும் போசாக்கு பிரிவின் பணிப்பாளர் கங்கா தில்ஹானி தெரிவித்தார்.
பல பெற்றோர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி டிஜிட்டல் திரைகளுக்கு அடிமையாகி உள்ளதால், இந்த நேரத்தில் தங்கள் பிள்ளைகளின் வீட்டுப்பாடங்களையும், படிப்பையும் புறக்கணித்து விடுவதாக கூறினார்.

இதேவேளை, தனிமையில் வாழும் பெண் பிள்ளைகளின்சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்