மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை கிராமத்தில் யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
நேற்று இரவு (01) குறித்த தாயாரும் பிள்ளைகளும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த வேளை வீட்டுக்குள் புகுந்த யானை, வீட்டை தாக்கி சேதப்படுத்தியிருந்ததோடு சத்தம் கேட்டு வெளியில் ஓடிவந்த குறித்த பெண்ணையும் தாக்கியது.

இதன்போது படுகாயங்களுக்கு உள்ளான குறித்த பெண் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.
தற்போது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.