Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் வீதிகளை மாத்திரம் அபிவிருத்தி என்ற போர்வையில் அமைத்து இலஞ்சம் பெற்றவர்கள் தற்போது சிறையில்

மட்டக்களப்பில் வீதிகளை மாத்திரம் அபிவிருத்தி என்ற போர்வையில் அமைத்து இலஞ்சம் பெற்றவர்கள் தற்போது சிறையில்

2 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

கடந்த காலத்தில் வீதிகளை மாத்திரம் அபிவிருத்தி என்ற போர்வையில் அமைத்தவர்கள் அதன்மூலம் தரகுப்பணத்தைப்பெற்றுக்கொண்டிருந்தார்கள். அந்த தரகுப்பணத்தினை, இலஞ்சத்தினைப்பெற்றவர்கள் இன்று சிறைவாசம் அனுபவிக்கும் நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், சட்டம் தனது கடமையினை சரியாக செய்யும் நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.

யுத்தம் நிறைவுபெற்று 15வருடங்களாக வடகிழக்கில் தொழிற்சாலைகள் கைவிடப்பட்ட நிலையிலேயே இருந்ததாகவும், இந்த நாட்டினை ஆட்சிசெய்த எந்த ஆட்சியாளர்களும் அவற்றினை கவனத்தில் கொள்ளாத நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே அவற்றினை கவனத்தில் கொண்டு, மூடப்பட்டிருந்த தொழிற்சாலைகளை மீள இயங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் “வெற்றிநமதே ஊர்நமதே” என்னும் தொனிப்பொருளில் எதிர்வரும் உள்ளுராட்சிசபை தேர்தல்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

நேற்றைய தினம் (02) மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் உள்ள மூன்று உள்ளுராட்சி சபைகளுக்கான தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வுகள் நடைபெற்றன.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபைக்காக போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

இதேபோன்று போரதீவுப்பற்று பிரதேசசபையில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு திருப்பழுகாமம் வெள்ளிமலை கலாசார மண்டபத்திலும், மண்முனை தென் மேற்கு பிரதேசசபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு கொக்கட்டிச்சோலையிலும் நடைபெற்றது.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபைக்காக போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றதுடன், இதன்போது வேட்பாளர்கள் அறிமுகம் செய்துவைக்கும் நிகழ்வு நடைபெற்றதுடன் விசேட தேர்தல் பரப்புரைகளும் நடைபெற்றன.

இதன்போது உரையாற்றிய கந்தசாமி பிரபு, இவ்வளவு காலமும் உள்ளுராட்சிசபைகளை ஆட்சிசெய்தவர்கள் சபைகளில் ஊழல்மோசடிகளை மேற்கொண்டிருந்தார்கள், நிதிகளை தவறான முறையில் பயன்படுத்தி வீணடித்துள்ளார்கள். இதன் காரணமாகவே கிராமங்கள், பிரதேங்கள் சரியான முறையில் வளர்ச்சியடையாத நிலைமைகள் காணப்படுகின்றன.

சபைகள் மட்டுமல் இந்த நாடும் கூட அதளபாதாளத்திற்கு வீழ்த்தப்பட்டிருந்த நிலையிலேயே தேசிய மக்கள் சக்தி பொறுப்பேற்று ஒரு முன்னேற்றகரமான நாடாக மாற்றியிருக்கின்றது. கைவிடப்பட்ட பல தொழிற்சாலைகளை மீளுருவாக்கம் செய்து ஏற்றுமதிகளை செய்யும் தொழிற்சாலைகளாக மாற்றியிருக்கின்றோம்.

அதேபோன்று வடகிழக்கில் பல தொழிற்சாலைகள் யுத்தகாலத்தில் கைவிடப்பட்ட நிலையிலிருந்தது. யுத்தம் நிறைவடைந்து 15வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் அதனை எந்தவொரு அரசாங்கமும் மீளுருவாக்கம் செய்ய எந்த முன்னெடுப்புகளும் செய்யாத நிலையே இருந்துவந்தது. ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அனுரகுமார திசாநாயக்க தலைமையில் நாட்டினை பொறுப்பேற்றபோது படிப்படியாக தொழிற்சாலைகளை மீளுருவாக்கம் செய்துவருகின்றோம்.

கடந்த காலத்தில் வீதிகளை மாத்திரம் அபிவிருத்தி என்ற போர்வையில் அமைத்தவர்கள் அதன்மூலம் தரகுப்பணத்தைப்பெற்றுக்கொண்டிருந்தார்கள். அந்த தரகுப்பணத்தினை, இலஞ்சத்தினைப்பெற்றவர்கள் இன்று சிறைவாசம் அனுபவிக்கும் நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், சட்டம் தனது கடமையினை சரியாக செய்யும் நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று கடந்தகாலத்தில் பேசுபொருளாகயிருந்தது பட்டலந்த வதைமுகாம். ஐதேக ஆட்சிக்காலத்தில் கிளர்ச்சியில் ஈடுபட்ட எமது கட்சியின் தோழர்கள் வதைமுகாம்களுக்கு கடத்திச்செல்லப்பட்டு அந்த வதைமுகாம்களில் சித்திரவதை செய்து, அவர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டதாக பட்டலந்த முகாம் தொடர்பில் தற்போது வெளிவரும் பல தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் அது தொடர்பான விவாதம் ஒன்று நடைபெறயிருக்கின்றது. அதன் ஊடாகவும் பல விடயங்கள் வெளிக்கொணரப்படவுள்ளன.

இந்த சித்திரவதை வதைமுகாம்களை இலங்கையில் முதன்முதலாக ஆரம்பித்தது. இதன் பிரதான சூத்திரதாரியாக ரணில் விக்ரமசிங்க இருந்திருக்கின்றார். இவர் மூலமாக பெருமளவான இளைஞர் யுவதிகள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இது தொடர்பான நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அதன் சூத்திரதாரிகளுக்கு தண்டனைப்பெற்றுக்கொடுக்கப்படும்.

இந்த நாட்டினை சரியான முறையில் வழிநடாத்தி அபிவிருத்தி பாதைக்கு கொண்டுசெல்லவேண்டும். மக்களின் வாழ்வியலை சரியான முறைக்கு கொண்டுவரவெண்டும். பொருளாதார நெருக்கடிகள் இருந்தாலும் விலைகள் குறைக்கப்படுகின்றன. மாற்றங்களை தேசிய மக்கள் சக்தியானது குறுகிய காலத்தில் செய்திருக்கின்ற நிலையில் மிகுதியாகவுள்ள நான்கரை வருடத்தில் நாட்டினை நல்ல வகையில் மீட்டு எடுக்கும் பாதையில் நாங்கள் பயணித்துக்கொண்டிருக்கின்றோம்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் பிரவுன் வுட் என்ற அரியவகை ஆந்தை கண்டுபிடிப்பு
செய்திகள்

இலங்கையில் பிரவுன் வுட் என்ற அரியவகை ஆந்தை கண்டுபிடிப்பு

May 18, 2025
மதுபோதையில் வாகனம் செலுத்திய ஆயித்தியமலை பொலிஸ் அதிகாரி கைது
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்திய ஆயித்தியமலை பொலிஸ் அதிகாரி கைது

May 18, 2025
“மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும்”; தவெக தலைவர் விஜய்
செய்திகள்

“மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும்”; தவெக தலைவர் விஜய்

May 18, 2025
மன்னார் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம் கரை ஒதுங்கியுள்ளது
செய்திகள்

மன்னார் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம் கரை ஒதுங்கியுள்ளது

May 18, 2025
கனடா நினைவுச்சின்னம் இப்போதும் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்கள் நீடிக்கின்றன என்பதை துரதிஸ்டவசமாக நினைவுபடுத்துகின்றது; மஹிந்த ராஜபக்ஸ
செய்திகள்

கனடா நினைவுச்சின்னம் இப்போதும் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்கள் நீடிக்கின்றன என்பதை துரதிஸ்டவசமாக நினைவுபடுத்துகின்றது; மஹிந்த ராஜபக்ஸ

May 18, 2025
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை கோரி முள்ளிவாய்க்கால் மண்ணை நோக்கி பயணிக்கும் சிறைக்கூடு
செய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை கோரி முள்ளிவாய்க்கால் மண்ணை நோக்கி பயணிக்கும் சிறைக்கூடு

May 18, 2025
Next Post
மட்டு கிரான்குளத்தில் மற்றுமொரு விபத்து; ஒருவர் பலி

மட்டு கிரான்குளத்தில் மற்றுமொரு விபத்து; ஒருவர் பலி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.