மீண்டும் விண்வெளிக்கு பறக்க தயாராக உள்ளதாக சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
விண்வெளி மையத்தில் இருந்து திரும்பிய பின்னர், நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் முதல் முறையாக ஊடகங்களுக்கு உரையாற்றினர்.
மீண்டும் ஸ்டார்லைனர் விண்கலத்தில் பறப்பீர்களா என்று கேட்டபோது, இரு விண்வெளி வீரர்களும் மீண்டும் பறப்போம் என தெரிவித்தனர்.
இது தொடர்பாக சுனிதா வில்லியம்ஸ் தெரிவிக்கையில்,
ஸ்டார்லைனர் மிகவும் திறமையான விண்கலம். சில விஷயங்களை சரி செய்ய வேண்டும். இது நிறைய திறன்களைக் கொண்டுள்ளது. பயிற்சி எங்களைப் புறப்படத் தயார்படுத்தியது. புதிய சவால்களுக்கு தயாராக எங்களுக்கு உதவியது. என்னை நானே பாராட்டிக் கொள்கிறேன்.

ஆனால் மீண்டும் அங்கு செல்ல எங்களைத் தயார்படுத்தியதற்காக எங்கள் பயிற்சியாளர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
ஆனால் நாங்கள் தரையிறங்கிய தருணத்திலிருந்து, எங்கள் ஆதரவுக் குழு எங்களுடன் இருந்து, எங்கள் வலிமையை மீண்டும் பெற உதவுகிறது. எங்களை வழிநடத்துகிறது.
என் தந்தையின் தாய் நாடான இந்தியாவுக்கு கண்டிப்பாக செல்வேன் விண்வெளியில் இருந்து பார்க்கும்போது இந்தியா அற்புதமாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, ‘நாங்கள் மீண்டும் ஸ்டார்லைனரைப் பயன்படுத்துவோம். போயிங் மற்றும் நாசா உறுதிபூண்டுள்ளதால், அதை சரிசெய்து, அதைச் செயல்பட வைப்போம்” என்று வில்மோர் தெரிவித்தார்.
கடந்த வருடம் ஜூன் மாதம், 5ம் திகதி, சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி மையத்துக்கு பயணமானார்.
அவருடன் விண்வெளி வீரர் புட்ச் வில்மோரும் சென்றார். எட்டு நாட்களுக்கான பயணம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 9 மாதங்களாக நீடித்தது. சமீபத்தில் இருவரும் பத்திரமாக பூமி திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.