யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரஸ்ட் மீது கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, அவர்களை பிணையில் செல்ல அனுமதிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (4) உத்தரவிட்டுள்ளது.

சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்யா படபெந்திகே முன்னிலையில் கையளிக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களை தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, மே 30 ஆம் திகதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.