எதிர்வரும் ஏப்ரல் 10ஆம் திகதி முதல் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 34% வரி விதிக்கப்படும் என்று சீனாவின் நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் சீனா, இந்தியா, இலங்கை மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ஏற்றுமதிப் பொருட்கள் மீது வரிகளை விதித்திருந்தார்.
இதற்கு பதிலடி அளிக்கும் விதமாகவே சீனா, அமெரிக்கப் பொருட்களுக்கு தற்போது வரியை விதித்துள்ளது.

அத்துடன், ஒருதலைப்பட்சமான கட்டண நடவடிக்கைகளை உடனடியாக இரத்து செய்யுமாறு அமெரிக்காவை சீனா வலியுறுத்தியுள்ளது.
மேலும், பரஸ்பர நன்மை பயக்கும் வகையில் ஆலோசனை மூலம் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக வேறுபாடுகளை தீர்க்க வேண்டும் எனவும் சீனாவின் நிதி அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதியின் வரிக்கொள்கை, உலகளாவிய பொருளாதார வளர்ச்சி மற்றும் சீன அரசின் ஸ்திரத்தன்மைக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் சீன நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.