கம்போடியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத குண்டுகளை தனது மோப்ப சக்தி மூலம் கண்டறிந்து ஆப்பிரிக்க பெருச்சாளியொன்று கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
‘ரோனின்’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த பெருச்சாளி, தரையில் புதைக்கப்பட்டிருந்த 109 கண்ணி வெடிகள் மற்றும் 15 வெடிக்காத குண்டுகளை மோப்ப சக்தி மூலம் கண்டறிந்துள்ளது.

இதற்கு முன்னா் மகாவா என்ற எலி 71 கண்ணிவெடிகளைக் கண்டறிந்ததே சாதனையாக இருந்த நிலையில் 109 கண்ணி வெடிகளை கண்டறித்து ‘ரோனின்’ பெருச்சாளி சாதனைப் படைத்துள்ளது.
இதுபோன்ற பணிகளை மேற்கொள்வதற்காக விலங்குகளைப் பழக்கும் அபாபோ என்ற அறக்கட்டளை நிறுவனம் ரோனின் பெருச்சாளியை பராமரித்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.