Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முல்லைத்தீவில் கசிப்பு விற்பனையாளர்களின் வீட்டிற்கு முன் பதாதைகளை காட்சிபடுத்தி மக்கள் போராட்டம்

முல்லைத்தீவில் கசிப்பு விற்பனையாளர்களின் வீட்டிற்கு முன் பதாதைகளை காட்சிபடுத்தி மக்கள் போராட்டம்

1 year ago
in செய்திகள்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாணிக்கபுரம் பகுதியில் உள்ள பெண்கள் ஒன்றிணைந்து போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவுக்குட்பட்ட மாணிக்கபுரம் கிராம அலுவலர் அலுவலகம் முன்பாக நேற்று (06) குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது தமது கிராமத்தில் போதைப்பொருள் பாவனையால் பல்வேறு சமூக சீரழிவுகள் இடம்பெற்று வருவதாகவும் அதனை உடனடியாக உரியவர்கள் கட்டுப்படுத்தி தமது இளம் சந்ததியினர் மற்றும் கிராம மக்களை பாதுகாக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

அத்துடன் ”மதுவை ஒழிப்போம் மக்களை காப்போம்“, “உழைத்து வாழப்பழகு ஊரை அழித்து வாழாதே“, “போதைப்பொருளை ஒழிப்போம் விசமிகளை அழிப்போம்“, “போதையால் ஊரை அழிக்கிறாயே உன் சந்ததி மட்டும் நிலைத்து வாழுமா“, போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை தாங்கியவாறும் பல்வேறு கோசங்களை எழுப்பியவாறும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இறுதியில் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் மற்றும் புதுக்குடியிருப்பு காவல் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரிடம் கையளித்தனர்.

போராட்டத்தைத் தொடர்ந்து குறித்த பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபடுவதாக அடையாளப்படுத்தப்பட்ட மூன்று வீடுகளுக்கு சென்ற மக்கள் அவர்களது வீட்டு வாசல்களில் பதாதைகளையும் காட்சிப்படுத்திவிட்டு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalsrilankanews

தொடர்புடையசெய்திகள்

மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!
செய்திகள்

மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!

August 8, 2026
மூதூர் 17 தன்னார்வத் தொண்டர்களின் படுகொலையின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்!
செய்திகள்

மூதூர் 17 தன்னார்வத் தொண்டர்களின் படுகொலையின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்!

August 8, 2026
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை விடுவிக்க கோரிக்கை!
செய்திகள்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை விடுவிக்க கோரிக்கை!

August 8, 2026
சிறைச்சாலை அசாதாரண சூழ்நிலை; தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!
செய்திகள்

சிறைச்சாலை அசாதாரண சூழ்நிலை; தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!

August 8, 2026
டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!
செய்திகள்

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!

August 8, 2026
வலப்பனையில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை நிறுவ முயற்சி!
செய்திகள்

வலப்பனையில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை நிறுவ முயற்சி!

August 8, 2026
Next Post
14 நாடுகளுக்கு தற்காலிக விசாக்களை தடை விதித்துள்ள வெளிநாடு

14 நாடுகளுக்கு தற்காலிக விசாக்களை தடை விதித்துள்ள வெளிநாடு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு