தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, மாத குறைந்தபட்ச ஊதியம் தற்போதைய 17,500 ரூபாவில் இருந்து 27,000ரூபாவாக உயரும் அதேவேளை தினசரி குறைந்தபட்ச ஊதியம் 700ரூபாவில் இருந்து 1,080 ரூபாவாக உயரும்.

மேலும், அமைச்சரவைப் பத்திரம் இரண்டாம் கட்ட ஊதிய உயர்வையும் முன்மொழிந்துள்ளது.
அதன்படி, ஜனவரி 1, 2026 முதல், மாதாந்திர குறைந்தபட்ச ஊதியம் 30,000ரூபாவாக உயர்த்தப்படும் என்றும், தினசரி குறைந்தபட்ச ஊதியம் 1,200 ரூபாவாக அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.