டொமினிகன் குடியரசின் தலைநகரான சாண்டோ டொமிங்கோவில் உள்ள இரவு விடுதியொன்றின் கூரை இடிந்து விழுந்ததில் 79 பேர் பலியானதுடன், 160ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று இரவு (08) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் மாகாண ஆளுநரான ஒக்டேவியோ டொட்டல் உள்ளடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் ஏனைய முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்ட இசை நிகழ்ச்சியின் போதே இவ்வாறு கூரை இடிந்து விழுந்துள்ளது.

இந்த சம்பவம் இடம்பெறும் போது குறித்த விடுதிக்குள் 500 முதல் 1,000 பேர் வரை இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்தநிலையில், இடிபாடுகளுக்குள் சிக்குண்டு காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மீட்புப் பணிகளில் 400இற்கும் மேற்பட்ட அவசரகால குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.