கட்டுகஸ்தோட்டை பாலத்தில் இருந்து மகாவலி ஆற்றில் குதித்த 21 வயதுடைய யுவதியை அந்த இடத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் காப்பற்றியுள்ளார்.
அடைமழை காரணமாக மகாவலி ஆற்றில் பாரிய வெள்ளம் ஒன்று கட்டுகஸ்தோட்டையில் இருந்து உருவாகியுள்ளது.
இந்நிலையில், இளம்பெண் ஒருவர், தவறான முடிவெடுக்கும் நோக்கில், ஆற்றில் குதித்துள்ளார்.

அதன்போது, கட்டுகஸ்தோட்டைக்கு அருகில் கடமையாற்றி வந்த பொலிஸ் அதிகாரி ஒருவர், தனது உயிரைப் பற்றி சிந்திக்காமல் ஆற்றில் குதித்து யுவதியை காப்பாற்றியுள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.