தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு இன்னும் ஒரு நாள் எஞ்சியிருக்கும் நிலையில், கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மக்கள் கூட்டம் நிறைந்து, பயண நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டை முன்னிட்டு, பெருந்திரளான மக்கள் தமது சொந்த ஊர்களுக்கு திரும்பும் ஆர்வத்துடன், பெட்டா – பஸ்டியன் மாவத்தை தனியார் பேருந்து நிலையம் மற்றும் கொழும்பு அரச பேருந்து நிலையம் ஆகியவற்றில் குவிந்துள்ளனர்.

காலி, மாத்தறை, கண்டி போன்ற நகரங்களிலும் மக்கள் நீண்ட தூரம் பயணிக்க காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மக்கள் கூட்டம் காரணமாக, பல முக்கிய நகரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.