சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபடுவோரை தடுக்க விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த பண்டிகைக் காலத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனையை தடுக்க 900க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.

மேலும் சட்டவிரோத மதுபானங்கள் மற்றும் போதைப் பொருட்கள் தொடர்பில் ஏதேனும் முறைப்பாடுகள் இருந்தால் 1913 என்ற இலக்கத்துடன் அல்லது 011 2 877 688 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 3ம் திகதி முதல் 12ம் திகதி வரையில் மதுவரித் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் உற்பத்திகள் குறித்த சுற்றி வளைப்புக்களில் மொத்தமாக 1320 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.