நாளை (15) நாட்டின் பல மாகாணங்களில் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தை அடைய வாய்ப்புள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்ட சில இடங்களிலும் குறித்த வெப்பக் குறியீடு எச்சரிக்கை மட்டத்தில் காணப்படும் எனவும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறு தொடர்ந்து அதிக வெயிலில் அலைவதனால் வெப்ப பக்கவாதம் (heat stroke) ஏற்படக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாகவும் அது எச்சரித்துள்ளது.
அதேசமயம் முடிந்த வரை வெளிப்புற செயல்பாடுகளை குறைக்கும் படியும், வேலை செய்யும் நேரங்களில் அதிக நீர் அருந்தும் படியும், முடிந்தவரை அடிக்கடி நிழலில் இடைவெளி எடுத்துக் கொள்ளுமாறும், முதியவர்கள், நோயாளிகள், குழந்தைகளை கண்காணிப்பில் வைத்துக்கொள்ளும்படியும், இலகுரக மற்றும் வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுமாறும் குறித்த அறிகையில் மேலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

