வீட்டின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மடவளை உல்பத்த பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

புத்தாண்டு தினத்தன்று சுபநிகழ்ச்சிகளை மேற்கொள்வதற்காக வீட்டை அலங்காரம் செய்துகொண்டிருந்த வேளையில், வீட்டின் மேல் மாடியின் பகுதியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.